2020ஆம் ஆண்டு முதல் நம் இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு அதனை விட காட்டிலும் அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் இந்த இரண்டு ஆண்டுகளை கொரோனா முதலாம் அலை மற்றும் 2வது அலை என்று பெயரிட்டு அழைத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவின் மூன்றாவது அலை அதிதீவிரமாக பரவியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கொரோனாவின் மூன்றாவது அலை இந்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவின் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு பெரும் சோகத்தை அளிக்கும் விதமாக கொரோனா 4 ஆவது அலை வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி இந்தியாவில் கொரோனா 4 ஆவது அலை ஜூன் மாதம் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வரை பரவும் என்று கூறப்படுகிறது. இதனை கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கொரோனா 4 ஆவது அலை தாக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.