
பொழுதுபோக்கு
தி லெஜெண்ட் படத்தின் வசூல் சாதனை தெரியுமா? மகிழ்ச்சியில் அண்ணாச்சி!
பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ‘தி லெஜெண்ட்’ படத்தில் அறிமுகமாகயுள்ளார். சுமார் 100 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகி உள்ளது.
லெஜெண்ட் படத்தில் சைன்டிஸ்ட் கேரக்டரில் சரவணன் நடித்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகள், காதல், சென்டிமென்ட் உள்ளிட்டவை அடங்கிய கமர்ஷியல் படமாக தி லெஜெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் உலகம் முழுவதும் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியான நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வெளியானதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் சரவணன் அருள் மீது வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இவை இதையும் பொருட்படுத்தாத சரவணன் அருள் அவரின் டிவிட்டர் பக்கத்தில் “அமோக வரவேற்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி”என தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ பங்ஷனுக்கு கிட்டத்தட்ட 10 கோடிகளுக்கு மேல் செலவு செய்ய பட்டது, மேலும் தி லெஜண்ட் படம் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது.
இப்படத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தலாவுக்கு மட்டுமே 20 கோடி சம்பளமாக கொடுக்கப் பட்டது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 7 நாட்கள் ஆனா நிலையில் இந்த படம் 7 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.
விஜய்யின் வாரிசு – தனுஷின் வாத்தி தமிழ் படமா? தெலுங்கு படமா? விளக்கம் இதோ!
மேலும் இந்த வாரம் திரையரங்குகளில் வேறு எந்த படமும் வராததால் சரவணன் படமே திரையரங்குகளில் ஓடிகொண்டுயிருக்கிறது, இதுவே லெஜெண்ட் படத்திற்கு மேலும் ஒரு படமாக அமைந்துள்ளது.
