Connect with us

புச்சா நகரில் பொதுமக்கள் மீதான தாக்குதலில் ஈடுபட வில்லை!!: ரஷ்யா மறுப்பு;

kiev

செய்திகள்

புச்சா நகரில் பொதுமக்கள் மீதான தாக்குதலில் ஈடுபட வில்லை!!: ரஷ்யா மறுப்பு;

புச்சா நகரில் பொதுமக்கள் மீதான தாக்குதலில் ஈடுபட வில்லை!!: ரஷ்யா மறுப்பு;

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் புரிந்து கொண்டு வந்தது. இதனால் உக்ரைனில் உள்ள பெரும்பாலான நகரங்கள் குண்டுகளால் நாசமாக பட்டது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் ரசியாவை திருப்பி பதிலடி கொடுத்தது.

இதனால் ரஷ்ய இராணுவத்தினர் பொதுமக்களை தாக்கியதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தது. அதுவும் குறிப்பாக புச்சா நகரில் உள்ள பொது மக்களை கொடூரமாக படுகொலை செய்ததாக ரஷ்ய படைகள் மீது உக்ரேன் அரசு குற்றச்சாட்டை வைத்தது.

இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஏனென்றால் அங்கு பொதுமக்கள் கைகளை கட்டி சுட்டுக் கொல்லப்பட்டதாக காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் பொது மக்களின் உடல்கள் சாலைகளில் கொத்துக்கொத்தாக குவிந்து கிடந்தது தெரிந்தது.

இந்நிலையில் இது குறித்து ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி பொதுமக்கள் மீதான தாக்குதலில் ஒருபோதும் ஈடுபடவில்லை என உக்ரேனின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தது.புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து நியாயமான வெளிப்படையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top