இதவிட்டா வேற வழி இல்ல.. இரும்புப் பெட்டிக்குள் மக்களை அடைத்து வைக்கும் சீன அரசு!

உலக அளவில் அதிக மக்கள் தொகையினைக் கொண்ட சீன அரசு கொரோனா இல்லாத நாட்டை உருவாக்க கொரோனா பாதித்தவர்களை இரும்புப் பெட்டிக்குள் வைத்து தனிமைப்படுத்தி வருகின்றது.

2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவாகியதாக உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டது.

சீனாவில் இருந்து ஒவ்வொரு நாடுகளுக்கும் கொரோனாத் தொற்று பரவிய நிலையில் சீனாவில் கொரோனாத் தொற்று குறைந்து போனது.

தற்போது கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் உலகினை ஆட்டிப்படைக்க சீனாவில் அந்த அலையில் மாட்டிக் கொண்டுள்ளது.

கொரோனா இல்லாத சீனாவை உருவாக்க எண்ணி சீன அரசு கொரோனாவால் பாதித்த கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை இரும்புப் பெட்டிக்குள் அடைத்து வைத்துள்ளது.

ஒவ்வொரு இரும்புப் பெட்டிக்குள்ளும் ஒருவர் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அந்தப் பெட்டியில் ஒரு படுக்கை மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தெருவில் வசிக்கும் யாராவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மொத்த தெருவினரையும் இரும்புப் பெட்டிக்குள் அடைக்கிறது சீன அரசு.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டே சீன அரசு இந்த அதிரடி முடிவினை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews