இனி அரசு அலுவலகங்களில் இது கட்டாயம் – தலைமைச் செயலாளரிடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு!

அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்களை காட்சி படுத்துக என தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறள் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும்.

திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்பவும், அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு இறையன்பு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.