ஒமைக்ரான், கொரோனா பரவல்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

நம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பே குறையாத நிலையில் புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் தோன்றி தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

ஒமைக்கிரான்

குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் தக்க பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இது குறித்து தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று பகல் 12 மணிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொள்கிறார் .

தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான்  பரவலை தடுப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment