ஆளுநர் டீ பார்ட்டியை வேண்டாம் சொன்ன முதல்வர் நரிக்குறவ மாணவி வீட்டில் முழு விருந்தே சாப்பிட்டார்..!!!

நேற்றைய தினம் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழக ஆளுநர் ரவி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியினர் தேனீர் விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் திமுகவினர் அதனை மறுப்பு தெரிவித்தனர்.

அதோடு மட்டுமில்லாமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்துக்கு கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று அவர் நரிக்குறவர் பெண் வீட்டில் காபி சாப்பிட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அதன்படி நரிக்குறவர் வீட்டில் கோழி குழம்பு சாப்பிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆவடியில் மாணவி வீட்டில் இட்லி, வடை, கறி குழம்பு சாப்பிட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். காபி அருந்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிகுறவர் சிறுமிக்கு இட்லியை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

மாணவி திவ்யாவுக்கு அளித்த உறுதி படி வீட்டிற்கு சென்று உணவருந்தி மகிழ்ந்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். ஆவடியில் நரிக்குறவர் மாணவி வீட்டில் சாப்பிட்ட சாப்பாடு காரணமாக இருந்ததாக கூறினேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

காரம் சாப்பிடுவதால் தான் சளி, இருமல் வருவதில்லை என நரிக்குறவர் இன சமூகத்தினர் கூறினர் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நரிக்குறவ மக்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றும் ஆவடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். நரிக்குறவ இன மக்களுக்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment