Connect with us

வெள்ளி வென்ற மீராபாயை வரவேற்க விமான நிலையம் சென்ற முதலமைச்சர்!

Sports

வெள்ளி வென்ற மீராபாயை வரவேற்க விமான நிலையம் சென்ற முதலமைச்சர்!

5f345caf67860df43d003268d3712ea2

இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் வரவேற்க மணிப்பூர் மாநில முதலமைச்சர் விமானநிலையம் சென்ற நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மீராபாய் சானு. இவருக்கு பிரதமர், குடியரசுத்தலைவர், மணிப்பூர் முதல்வர், தமிழக முதல்வர் உள்பட பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் டோக்கியோ விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லி வந்த மீராபாய் இன்று தனது சொந்த மாநிலமான மணிப்பூரில் சென்றார். அவர் வருவதை அறிந்து மணிப்பூர் மாநில முதலமைச்சர் நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றார் 
இந்தியாவுக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த மீராவை தனது வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார். மீராபாய் மணிப்பூர் வருவதை அறிந்ததும் அம்மாநில ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top