பொங்கல் பரிசு தொகுப்பு தரமாக உள்ளதா? ஆய்வுக்கு போன இடத்தில் மாஸ்க் கொடுத்து மாஸ் காட்டும் முதல்வர்!

தமிழர் திருநாள் என்றால் அனைவரும் கூறுவது தைப்பொங்கல் திருநாள் தான். நம் தமிழகத்திலும் பொங்கல் திருநாள் நெருங்கிவிட்டது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஒருசில ரேஷன் கடைகளில் முறையான வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் வீடியோ மூலமாக ஆதாரப்படி குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதற்கு சட்ட பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தக்க பதில் வழங்கி இருந்தார்.

அவர் அடுத்ததாக ரேஷன் கடைக்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் ஊழியரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார். அதன் பின்னர் முறையாக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறதா? என்பதனை ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ராயபுரம் ரேஷன் கடையில் ஆய்வு செய்து வருகிறார். சென்னை ராயபுரம் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக தரப்படுகிறதா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். ஆய்வு செய்தபிறகு மாஸ்க் போடாத நபர்களுக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment