தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று பதிவிட்ட முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள்

தமிழ்ப்புத்தாண்டு தினம் எப்போதும் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வருவதே தமிழ்ப்புத்தாண்டு என தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2006ல் இருந்து 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழ்ப்புத்தாண்டு என்பது தை மாதம் தான் . தை மாதம் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவதே சரியாக இருக்கும் என தமிழ்ப்புத்தாண்டு என்பது பொங்கலன்று கொண்டாடப்பட வேண்டும் என பொங்கல் தினத்தை தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்தனர்.

ஆனால் மீண்டும் வந்த அதிமுக அரசு அதை மாற்றி உத்தரவிட்டது. 10 வருடங்களாக இது சம்பந்தமான சர்ச்சைகள் இல்லாத நிலையில் மீண்டும் திமுக அரசு அமைந்து விட்டதால் ஜனவரி 14 பொங்கல் அன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு அதாவது தை மாதம் 1ம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என மறைமுகமாக கூறி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியிலும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சித்திரை 1 தானே தமிழ்ப்புத்தாண்டு என முதல்வரின் பதிவில் கேள்வி எழுப்பி வருகின்றனர். சில இணைய விமர்சகர்களும் இதை எதிர்த்து  கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment