தமிழக முதல்வர் இதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்: தமிழக விவசாய சங்கம் கோரிக்கை

ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 30 ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெறுகிறது

மாநிலம் முழுவதுமுள்ள 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். கேரளா மாநில நிதித்துறை அமைச்சர் பால கோபால் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், தொழிற் சங்கங்கள் பங்கேற்க உள்ளனர்

மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம், மின்சார திருத்த சட்டம் வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டங்கள் நிறுத்தப்படும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவித்தார்கள். குறிப்பாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்புக்கு டன்னுக்கு 4000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. அதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்

நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே இறால் பண்ணைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment