தான் பிறந்த சொந்த கிராமத்தில் 16ஆம் தேதி பதவியேற்கிறார் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர்!
நேற்றைய தினம் பலருக்கும் ஆச்சரியம் அளிப்பதாக பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் காணப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளது. அதன்படி பஞ்சாபில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதனால் ஆம் ஆத்மி கட்சி அங்கு உதயமாகியுள்ளது. பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளில் 90க்கு மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் முதல்வராக பொறுப்பு ஏற்பதற்கு முன்னதாகவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன்படி அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படம் இருக்காது என்று ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் கூறியிருந்தார். அதோடு மட்டுமில்லாமல் அவர் பதவி ஏற்பு தன் கிராமத்தில் தான் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் வருகின்ற 16ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சண்டிகரில் இன்று மாலை பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பகவந்த் மான் பதவி ஏற்பு விழாவில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வராக பகவான் ஒருமனதாக தேர்வாகியுள்ளார்.
