Connect with us

தமிழர்களுக்கு சோகத்தை அளிக்கும் நம்பிக்கையை தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர்!!

News

தமிழர்களுக்கு சோகத்தை அளிக்கும் நம்பிக்கையை தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர்!!

4c79ad9a1cbf064d504e45016a373b69

தற்போது நம் தமிழகத்தில் உள்ள பல டெல்டா மாவட்டங்களில் வறண்ட  நிலப் பகுதி அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற காவிரி குடிநீர் ஆனது கர்நாடக அரசு குறைவாகவே வழங்குகிறது. மேலும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு இவ்வாறு செய்வது தமிழர்களுக்கு மிகவும் பெரும் பாதிப்பினை உருவாக்குகிறது. இத்தகைய மத்தியில் கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சில தினங்களுக்கு முன்பாக தமிழக மக்களுக்கு பெரும் சோகத்தை அளிக்கும் தகவலை கூறியிருந்தார்.4698f66e98b40e244a45383897554523

அந்தப்படி மேகதாது அணை கட்டப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன மேலும் தமிழகத்தின் முதல்-அமைச்சர் நேரடியாக டெல்லி சென்று இது குறித்து கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது குறித்து சில நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதன்படி மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்று கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அணை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் இந்த திட்டத்தின் உண்மை நிலைமையையும் மத்திய அரசிடம் எடுத்துக் கூற உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். அணை கட்டுவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top