முதல்வர் ஸ்டாலினின் அசத்தலான புதிய திட்டம்! இனி அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கலாம்; நாளைய தினம் முதல் தொடங்கிவைப்பு!!

பத்து ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இதில் புதிய முதல்வராக ஸ்டாலின் உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களிடையே நல்லதொரு மதிப்பை பெற்று வருகிறார்.

அதோடு தமிழகத்தில் நாளுக்கு நாள் புதுப்புது திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாளைய தினம் தமிழகத்தில் மற்றொரு புதிய திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அரசு திட்டங்களுக்காக மின்னணு தகவல் பலகையை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தனது அலுவலகத்திலிருந்து அனைத்து திட்டங்கள் பற்றியும் மின்னணு தகவல் பலகையில் அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள், வெளியிடப்பட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. எந்த கிராமத்தில் என்ன பணி நடைபெறுகிறது? எங்கு தொய்வு? என முதல்வர் அறிந்து கொள்ளும் வகையில் இத்தகைய திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment