Connect with us

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஹைகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு…!!

நீதிபதி

செய்திகள்

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஹைகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு…!!

கடந்த வாரம் டெல்லியில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் டெல்லியில் மற்றும் ஒரு மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் இன்று ஹைகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.

அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களில் இரண்டு நாள் தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில் தொடங்குகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் 39-வது மாநாட்டிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமை தாங்குகிறார்.

ஹை கோர்ட் நீதிபதிகள் நியமனம், நீதிசார் திருத்தங்கள், உட்கட்டமைப்பு பற்றி மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. விரைவாக நீதி வழங்குதல், நீதித்துறை சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது.

நாளை அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பல மாநிலங்களில் உச்சநீதிமன்ற கிளைகள் அமைப்பது தொடர்பாக நாளைய மாநாட்டில் ஆலோசனை பெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top