44 வது செஸ் ஒலிம்பியாட்-இன்று பிற்பகல் 3 மணி முதல் போட்டிகள் தொடக்கம்!!

இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக நிகழ்வு தமிழகத்தில் அரங்கேறி கொண்டு வருகிறது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் தமிழகத்தில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் முருகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் அங்கு அனைவரும் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. மேலும் தமிழகத்திற்கு வந்த அனைத்து வெளிநாட்டு வீரர்களும் வரவேற்பு மிகவும் பிரமாதமாக இருப்பதாகவும், வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று செய்யவில்லை என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டி இன்றைய தினம் சரியாக 3 மணிக்கு தொடங்குகிறதாக தகவல் கிடைத்துள்ளது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தினமும் மத்திய 3 மணி முதல் இரவு 8 மணி வரை போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment