ஒரு ரூபாய் வரியாக பெற்று 35 காசு தருகிறது மத்திய அரசு-அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

அவ்வப்போது ஆளும் கட்சியான திமுக மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கும். அந்த வகையில் தமிழகத்தின் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அதுவும் மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரி பற்றி அவர் கருத்து கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் இருந்து வரியாக மத்திய அரசு ஒரு ரூபாய் பெறுகிறது. ஆனால் அதில் மாநில பங்காக 35 காசு மட்டுமே தருவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூபாய் 28,000 கோடியை மத்திய அரசு இன்னும் தரவில்லை என்றும் அவர் கூறினார். தமிழகத்திற்கான வரியை முறையாக தராமல் பலவற்றை செய்தோம் என மத்திய அரசு கூறுவது பேச்சுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து, விட்டு சென்ற ரூபாய் 6 லட்சம் கோடி கடனுக்கு வட்டி, அசல் கட்டி வருகிறோம் என்றும் அதிமுக விமர்சித்து அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment