Connect with us

மாநிலங்களின் முழு வரியை தின்றுவிடும் ஒன்றிய அரசு.!!-ஸ்டாலின்;

வரி

தமிழகம்

மாநிலங்களின் முழு வரியை தின்றுவிடும் ஒன்றிய அரசு.!!-ஸ்டாலின்;

முதலமைச்சர் ஸ்டாலின் மேட்டூர் அணை திறப்பு பற்றி கூறியுள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனென்றால் உயர்த்தியது மூன்று மடங்காக இருக்கும்போது குறைப்பது மட்டும் சிறிதளவா? என்றும் கேள்வியை கேட்டுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு பொருளாதார நெருக்கடியை தருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஏனென்றால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூபாய் 21 ஆயிரத்து 760 கோடி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் மாநிலங்களின் வரியை ஒன்றிய அரசு தின்று விட்டது என்றும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். மாநிலங்களின் முழு வரியையும் ஒன்றிய அரசு சுரண்டி தின்று விட்டது என்றும் கூறி பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளார்.

ஒன்றிய அரசுக்கு எதிராக இவ்வாறு பல்வேறு விதமான குற்றசாட்டுகளை முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்துள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top