Connect with us

நீட் விலக்கு மசோதா: தமிழக அரசின் பதிலுக்கு காத்திருக்கும் மத்திய அரசு!!

நீட் விலக்கு மசோதா

செய்திகள்

நீட் விலக்கு மசோதா: தமிழக அரசின் பதிலுக்கு காத்திருக்கும் மத்திய அரசு!!

ஒவ்வொரு ஆண்டும் நம் தமிழகத்தில் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பது ஒவ்வொருவரின் எண்ணமாக மாறி உள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக நீட் விலக்கு மசோதாவினை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளனர். ஒவ்வொரு முறையும் ஆளுநர் அதனை திரும்பி அனுப்பியிருந்தாலும் விடாது முயற்சி இட்டு தமிழக அரசு மீண்டும் மசோதாவை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழக அரசின் பதிலுக்காக மத்திய அரசு காத்துக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மக்களவையில் மதுரை எம்பி வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா இவ்வாறு பதிலளித்தார் .

மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுள் அமைச்சகம் தனது கருத்துக்களை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது என்றும் கூறினார். மேலும் மத்திய அரசின் இரண்டு துறை கருத்துக்களுக்கு தமிழக அரசு பதிலளித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அஜய் மிஸ்ரா கூறினார்.

இறுதி முடிவு எடுக்க எவ்வளவு அவகாசம் தேவைப்படும் என்பதை முடிவு செய்ய வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top