கடந்த சில மாதங்களாகவே இந்தியாவிற்கு பெரும் பிரச்சினை நிலவி கொண்டுதான் வருகிறது. முதலில் இந்திய எல்லைகளை சீனா படையினர் ஆக்கிரமிப்பு பெரும் தலைவலியாக காணப்பட்டது.
தற்போது உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கிக் கொண்டிருப்பது இந்திய அரசிற்கு கடினமான ஒன்றாக காணப்படுகிறது. இருப்பினும் உக்ரைன் நாட்டில் இருந்த இந்திய மாணவர்கள் பலரும் மிகவும் பாதுகாப்பாக தாயகம் திரும்பிக் கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசும் உக்ரேனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் கவனம் செலுத்தி கொண்டு வந்தது. அதனால் உக்ரைன் நாட்டில் சுற்றியுள்ள அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியா விமானம் மூலம் மாணவர்களை தாயகம் அழைத்துக் கொண்டு வந்தது.
இந்த நிலையில் இத்தகைய ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல்காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒன்றிய அரசு சரியான திட்டமிடல் இல்லாததால் தான் நாடு பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி கூறினார்.
ரூபாய் மதிப்பு சரிவு, வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றில் எந்த திட்டமும் ஒன்றிய அரசிடம் இல்லை என்றும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். உக்ரைனில் மாணவர்கள் தவிப்பு, சீன ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் ஒன்றிய அரசுக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை என்று ராகுல்காந்தி ஒன்றிய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார்.