Connect with us

மத்திய அரசின் பட்ஜெட் நமத்துப் போன பட்டாசு! எந்த ஒரு பயனும் இல்லை: பாலகிருஷ்ணன்

budget 2022 sitharaman bannerreuters

News

மத்திய அரசின் பட்ஜெட் நமத்துப் போன பட்டாசு! எந்த ஒரு பயனும் இல்லை: பாலகிருஷ்ணன்

மத்திய அரசின் பட்ஜெட் நமத்துப் போன பட்டாசு! எந்த ஒரு பயனும் இல்லை: பாலகிருஷ்ணன்

இன்று காலை நம் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் டிஜிட்டல் முறையில் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் புதிய ரயில்கள், கிராமங்கள் முழுவதும் இன்டர்நெட் சேவை, விரைவில் 5G திட்டம் போன்ற அதிநவீன திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இருப்பினும் எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை கூறிக்கொண்டு வருகின்றனர்.

k.balakrishnan

அந்த வரிசையில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மத்திய அரசின் பட்ஜெட் நமத்து போன பட்டாசு போன்றது என்று கூறியுள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையிலான எவ்வித அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றும் வகையிலேயே மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top