நடிகர் சங்கத் தேர்தல்: தீர்ப்பு செல்லாது என்ற வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!!

தினந்தோறும் நம் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு அதற்கு உத்தரவிடப்படும். ஒரு சில சமயத்தில் தீர்ப்பு தள்ளி வைக்கப்படும். அதில் நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு தீர்ப்பை தள்ளிவைத்தது ஹைகோர்ட்.சென்னை உயர்நீதிமன்றம்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தும் தனி அதிகாரி நியமனம் செல்லும் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

மூன்று மாதத்தில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 80 சதவீத வாக்குகளுடன் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது என்று நடிகர் சங்கம் சார்பில் கூறப்படுகிறது.

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணி தான் முடிவை அறிவிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் கூறியுள்ளது. தேர்தலுக்காக 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஐகோர்ட்டில் தகவல் அளித்தனர்.

இதனால் தனி அதிகாரி கீதா பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது. நடிகர் சங்க ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் பணியை மட்டுமே தனி அதிகாரி கீதா மேற்கொள்கிறார் என்று ஐகோர்ட்டில் அரசு வாதிட்டது.

தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன நடிகர் சங்க உறுப்பினர்கள் பட்டியலை இறுதி செய்து தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடிகளால் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் குற்றசாட்டு வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment