Connect with us

நடிகர் சங்க தேர்தல் செல்லும்-மறு தேர்தல் தேவையில்லை! தனி நீதிபதி உத்தரவு ரத்து!

நடிகர் சங்கம்

பொழுதுபோக்கு

நடிகர் சங்க தேர்தல் செல்லும்-மறு தேர்தல் தேவையில்லை! தனி நீதிபதி உத்தரவு ரத்து!

நடிகர் சங்க தேர்தல் செல்லும்-மறு தேர்தல் தேவையில்லை! தனி நீதிபதி உத்தரவு ரத்து!

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தேர்தல் களமாக அமைந்து காணப்படுகிறது. ஏனென்றால் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை அன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து அரசியல் களம் சூடு பிடித்ததாக காணப்படுகிறது.

இந்த தேர்தல் அரசியலினை தாண்டி சினிமாவிலும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அதன்படி தமிழகத்தில் நடிகர் சங்க தேர்தல் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி நடிகர் சங்க தேர்தல் மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் தற்போது நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் மறு தேர்தல் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி 2019ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதியில் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாசர், விஷால் ,கார்த்தியின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது சபிக் தீர்ப்பளித்துள்ளனர்.

ஏற்கனவே பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்து இருந்த தனி நீதிபதி கல்யாணசுந்தரத்தின் உத்தரவு ரத்தானது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top