Connect with us

இரட்டை இலை சின்னம் வழக்கு-வழக்கறிஞர் தற்கொலை!! டிடிவி-க்கு சம்மன்!

admk flag

தமிழகம்

இரட்டை இலை சின்னம் வழக்கு-வழக்கறிஞர் தற்கொலை!! டிடிவி-க்கு சம்மன்!

இரட்டை இலை சின்னம் வழக்கு-வழக்கறிஞர் தற்கொலை!! டிடிவி-க்கு சம்மன்!

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா திடீரென்று காலமான பின்னர் கட்சிக்குள் பெரும்பிளவு உண்டானது. அதோடு மட்டுமில்லாமல் கட்சியில் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் குறித்து வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கறிஞர் தற்போது தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இரட்டை இலை சின்னத்தை மீட்க பெங்களூருவைச் சேர்ந்த மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் முயற்சிக்க பட்டதாக தெரிகிறது.

டிடிவி தினகரன் பேரம்பேசி லஞ்சம் கொடுத்ததாக கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிந்து சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில் கோபிநாத்தின் சீனியர் வழக்கறிஞரான ராமப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.கோபிநாத்தை செல்போனில் தொடர்பு கொண்டு அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு வருமாறு கூறியதாக தகவல் வெளியானது.

இதனால் மனவேதனையில் இருந்த கோபிநாத் தனது வீட்டின் எதிரே இருந்த குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். டெல்லியில் உள்ள அலுவலகத்தில் எட்டாம் தேதி விசாரணைக்கு ஆஜராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top