தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகயுள்ளது.
இப்படம் இன்று பிரம்மாண்டமாக உலகளவில் வெளியாகியுள்ளது, மேலும் ரசிகர்களும் இப்படத்தை காண திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசின் உத்தரவை மீறி 100% ரசிகர்களை அனுமதித்ததால், சென்னை காசி தியேட்டர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் காசி தியேட்டர் மேலாளர் மீது கொரோனாவை பரப்பும் வகையில் செயல்பட்டதாக வழக்கு என தகவல் வெளியாகியுள்ளது.