#Breaking 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பரிதாபமாக உயிரிப்பு!

உளுந்தூர்பேட்டை அருகே கார் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் உசேன் மகன் ஏஜாஸ் (28) இவருடைய மனைவிக்கு சேலத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை பார்க்க தனது குடும்பத்தினருடன் நேற்று சேலத்திற்கு சென்று விட்டு, மீண்டும் அதே காரில் சென்னை திரும்பியுள்ளார். இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புக்கட்டையில் மோதிய கார்,   சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து நொறுக்கியது.

இந்த கோர விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஏஜாஸின் தாயார் ஹமீம்( 50), தங்கை அம்ரின் (22), சித்தி நமீம் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரை ஓட்டி சென்ற ஏஜாஸ் மற்றும் அவருடைய சித்தி நவீம் ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காரை ஓட்டி வந்த ஏஜாஸ் தூக்க கலக்கத்தில் தடுப்புக்கட்டை மீது மோதியதால் தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment