Connect with us

மத்திய அரசு பணிக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அழைப்பதை அரசியலாக்க கூடாது!: அண்ணாமலை

IAS Officer and IPS Officer and Why

செய்திகள்

மத்திய அரசு பணிக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அழைப்பதை அரசியலாக்க கூடாது!: அண்ணாமலை

மத்திய அரசு பணிக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அழைப்பதை அரசியலாக்க கூடாது!: அண்ணாமலை

மத்திய அரசு நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகளையும் திருத்தங்களையும் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. நேற்றைய தினம் கூட அமர்ஜவான் ஜோதியில் இடமாற்றம் செய்தது. அதன் வரிசையில் எப்போது வேண்டுமானாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு அழைக்கப்படலாம் என்று பணி நியமனம் திருத்தம் செய்துள்ளது.

இதற்கு தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதோடு மட்டுமில்லாமல் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் பணிக்கு அழைப்பதை அரசியலாக்க கூடாது என்று கூறியுள்ளது பலருக்கும் வியக்கத்தக்கதாக காணப்படுகிறது.

அதன்படி மத்திய அரசு பணிக்கு மாநில ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை அழைப்பதை அரசியலாக்க கூடாது என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக உள்ளனர் என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top