பக்ரித்தின் எதிரொலி-சூடு பிடித்த ஆட்டு சந்தையின் வியாபாரம்!! ஒரு கோடி ரூபாய் தாண்டி விற்பனை;

கடந்த மே மாதம் தான் முஸ்லிம்களின் பிரதான பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆடுகளின் விலை உயர்வு சற்று அதிகரித்துள்ளது.

ஆயினும் கூட சந்தைகளில் ஆடுகளின் விற்பனையும் சூடு பிடித்துள்ளதாக தெரிகிறது. அதன் எதிரொலியாக மயில் சரணாலயம் என்று அழைக்கப்படுகின்ற விராலிமலையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி அங்கு நடைபெறும் வாரத் சென்னையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது.

ஒரு கிலோ 1000 ரூபாய் தாண்டியும் சராசரியாக ஒரு ஆட்டின் விலை 8000 ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரம் சூடு பிடித்ததாகவும் விற்பனையாளர்கள் கூறியிருந்தனர். இதனால் ஆடு விற்பனையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment