
தமிழகம்
ரேஷன் பொருள்களோடு நின்ற பெண்! கண்டுக்காமல் சென்ற பேருந்து!! சுற்றிவளைத்த மகளிர் கூட்டம்;
பல இடங்களில் மூட்டைகள் கொண்டிருந்தால் கண்டும் காணாதது போல் பேருந்து நிறுத்தாமல் ஓட்டுனர்கள் சென்று விடுவார்கள். இது நம் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் நடந்து கொண்டுதான் வருகிறது.
இதனை சுட்டிக்காட்டி மக்களுக்கு உணர்த்தும் விதமாக கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இதுபோன்ற ஒரு காட்சியில் நடித்திருந்தார். இதனால் தமிழகத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு பாடமாக அமைந்தது.
இருப்பினும் கூட பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால் முதியவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அந்த வகையில் பேருந்தை நிறுத்தாமல் இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கரூரில் ரேஷன் பொருட்கள் அடங்கிய மூட்டையுடன் வந்த பெண்ணை பேருந்தில் ஏற்றாமல் அவமதித்த விவகாரம் தொடர்பாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துனர் மகேந்திரனை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மூட்டையுடன் குழந்தையின் தாய் முன்னரே ஓட்டுனர் பேருந்தை எடுத்ததாக கூறி பேருந்தை பெண்கள் சிறை பிடித்தனர்.
