ஓட்டுனருக்கு வலிப்பு! கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

கடந்த 28-ம் தேதி காரைக்கால் அடுத்த தனியார் பேருந்து ஒன்று திருநல்லாறு அடுத்த அம்பகத்தூர் பகுதியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்துகொண்டிருந்தது.

அப்போது பேருந்தை இயக்கி கொண்டிருந்த ஐயப்பன் என்பவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

மம்தா பானர்ஜி உடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

இத்தகைய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பகத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலர்ட்! அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை!

இந்த சூழலில் பேருந்தின் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment