திருப்பதி கோயிலுக்கு சொந்தமான பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்தது…;

நம் இந்தியாவில் மிகப்பெரிய சிறப்பு வாய்ந்த கோயிலாக காணப்படுகிறது திருப்பதி கோவில். திருப்பதி ஏழுமலையானை பணக்கார கடவுள் என்று பலரும் அழைப்பர். இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட திருப்பதி கோவிலில் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான பேருந்து தற்போது ஒன்று எரிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான இலவச பேருந்து மலைப் பாதையில் தீப்பிடித்து எரிந்தது. தேவஸ்தான் பணிமனையில் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் திருமலைக்கு இன்று பேருந்து சென்றது.

மலைக்கு சென்ற பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கினார்.  இந்த தீப்பிடிப்பிற்கு டீசல் கசிவு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் இந்த அசம்பாவிதங்கள் நிகழவில்லை என்பது நிம்மதி அளிப்பதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment