காங்கிரஸ் ஆட்சியில் பிஎஸ்என்எல் மூடும் நிலைக்கு போனது!: மக்களவையில் நிதியமைச்சர் ஆவேசம்;

பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவில் 2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் பின்னர் தினம்தோறும் பட்ஜெட் பற்றிய எதிர்க்கட்சிகள் இதர கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் ஆட்சி மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதன்படி காங்கிரஸ் ஆட்சியில் இரட்டை இலக்க பணவீக்கம் இருந்ததாக அவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருண்ட காலமாக இருந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டை வைத்துள்ளார். பணவீக்க விகிதத்தை இரட்டை இலக்கத்தில் வைத்திருந்ததாகவும் மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை அளித்தார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் பிஎஸ்என்எல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டை வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment