அண்ணியுடன் தகாத உறவு; தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற அண்ணன் கைது!

விளாத்திகுளம் அருகே தனது மனைவியுடன் விவகாரத்தில் தம்பியை அண்ணன் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்கு சேவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் என்பவர், பனைத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஞானமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சேதுராமனின் வீட்டிற்கு அருகிலேயே அவரது அண்ணன் ராமநாதனும் வசித்து வந்துள்ளார். பனைத்தொழில் செய்து வரும் ராமநாதன் தனது மனைவி சோலையம்மாள் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சேதுராமனுக்கும், அவரது அண்ணன் மனைவி சோலையம்மாளுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக ரகசிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அண்ணன், தம்பி இருவரும் மது அருந்தும் போது, போதையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் ராமநாதன், இரும்பு கம்பியால் தம்பி சேதுராமனை தலையின் பின்பக்கத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சேதுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த சூரங்குடி காவல்துறையினர் சேதுராமன் உடலை கைப்பற்றி உடல் கூறும் ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் தொடர்பாக இராமநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment