பல தடைகளைத் தாண்டி முதல் முறையாக இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்…!!
தற்போதைய பிரிட்டன் பிரதமராக உள்ளார் போரிஸ் ஜான்சன். இவர் முதன் முறையாக இந்தியா வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அத்தனை திட்டங்களும் ரத்தானது.
அதுவும் குறிப்பாக குடியரசு தினத்தன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தால் அந்த பயணம் ரத்தானது.
இந்த நிலையில் பல்வேறு விதமான தடைகளை தாண்டி இன்றைய தினம் இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன். அதன்படி இரண்டு நாட்கள் அரசு விடுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முதலாக இந்தியாவுக்கு வருகிறார் போரிஸ் ஜான்சன். குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின் குஜராத்தின் அகமதாபாத் செல்கிறார் போரிஸ் ஜான்சன். போரிஸ் ஜான்சன் வருகையின் போது பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
