Connect with us

ரஷ்யாவிற்கு செக் வைத்த பிரிட்டன் அரசு!! எப்படி தெரியுமா?

202201200454028185 Tamil News Tamil News British govt announces end of COVID19 measures SECVPF

செய்திகள்

ரஷ்யாவிற்கு செக் வைத்த பிரிட்டன் அரசு!! எப்படி தெரியுமா?

ரஷ்யாவிற்கு செக் வைத்த பிரிட்டன் அரசு!! எப்படி தெரியுமா?

ரஷ்யாவின் 5 வங்கிகள் மற்றும் 3 பெரும் செல்வந்தர்கள் மீது பொருளாதர தடைகள் விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

உக்ரைனில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள உகான், டுனட்ஸ் ஆகிய பகுதிகளை சுயஆட்சி பகுதிகளாக உறுதி செய்து அங்கு ரஷ்யா தனது படைகளை அனுப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரஷ்யாவின் நடவடிக்கை உக்ரைன் மீது முழுஅளவிலான போரை தொடுப்பதற்கான முன்னோட்டம் என விமர்சித்துள்ளார். ரஷ்யாவின் 5 வங்கிகள் மற்றும் அந்த நாட்டைச்சேர்ந்த பெரும் செல்வந்தர்களுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் பிரிட்டனில் உள்ள அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள 3 செல்வந்தர்களும் பிரிட்டன் வர தடைவிதிப்பதோடு அவர்கள் பிரிட்டனில் தொழில் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்  செய்வோன்  என அமெரிக்கா  அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top