முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். எனவே மாநிலத்தின் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவாக்கப்படும் என்றும், அதற்காக 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.
இத்திட்டம் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்பதை சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.