பிராண்ட் கச்சா எண்ணெய் விலை குறைவு-பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லை!!

தற்போது பிராண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 20% குறைந்துள்ளது. ஆயினும் கூட நம் தமிழகத்தில் கடந்த 91 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு பிராண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு பேரல் பிராண்ட் கச்சா எண்ணெய் விலை 123 டாலராக இருந்தது.

ஆனால் தற்போது வெறும் 95 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவுக்கு பிராண்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆயினும் கூட பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் அறிவிக்காதது பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெய் இறக்குமதியில் நம் இந்தியாவிற்கு ரஷ்யா தொடர்ந்து உதவியை செய்து கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment