Connect with us

ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் விபத்துக்கு பிரேக் பழுது காரணம் இல்லை…!!

beach train

தமிழகம்

ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் விபத்துக்கு பிரேக் பழுது காரணம் இல்லை…!!

ஞாயிற்றுக்கிழமை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் வந்த மின்சார ரயில் திடீரென்று விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் தடம்புரண்டு அங்குள்ள நடைமேடையின் மீது ஏறியது. அதோடு மட்டுமில்லாமல் ரயில் ஓட்டுநர் குதித்து கத்தியவாறே எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் ரயில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் பிரேக் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் மின்சார ரயில் விபத்திற்கு உண்மையான காரணம் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மின்சார ரயில் விபத்திற்கு பிரேக் பழுது காரணமல்ல என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஓட்டுனரின் கவனக் குறைவு தான் விபத்து ஏற்பட காரணம் என்றும் தகவல் உறுதியாகியுள்ளது. ரயிலை நிறுத்துவதற்கான லீவருக்கு பதில் வேகத்தை அதிகரிக்கும் லீவரை இயக்கி இருந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்தது.

தொழில்நுட்ப ரீதியான விசாரணையில் அளிக்கப்படும் விளக்கங்களை வைத்து விபத்திற்கான காரணம் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top