முக்கோண காதல் விபரீதம்! காதலியை கொலை செய்த இளைஞர்..!!

காலணியில் வசிப்பவர்கள் கார்த்திக், பிருந்தா. இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி கார்த்தி தன்னுடைய அக்கா வீட்டிற்காக வெளியூர் சென்றுள்ளார். இந்த சூழலில் மறு நாள் காலையில் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது பிருந்தா சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

உயிரிழந்த பிருந்தாவிற்கும் அரவிந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதே சமயம் மீண்டும் கணவர் கார்த்திக் உடன் பிருந்தா சேர்ந்து வாழ்ந்ததாக தெரிகிறது.

இருப்பினும் அரவிந்தை மறக்க முடியாமல் கடந்த 27ம் தேதி அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அரவிந்த் தன்னுடன் வருமாறு பிருந்தாவை கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரத்தில் பிருந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமானது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment