Connect with us

காதலிக்காக சிறுநீரகம் கொடுத்த காதலன். கழட்டிவிட்ட காதலி!

The boyfriend who gave the kidney for the girlfriend

செய்திகள்

காதலிக்காக சிறுநீரகம் கொடுத்த காதலன். கழட்டிவிட்ட காதலி!

காதலிக்காக சிறுநீரகம் கொடுத்த காதலன். கழட்டிவிட்ட காதலி!

காதலிக்காக சிறுநீரகத்தைக் கொடுத்த காதலனை ஏமாற்றிவிட்டு வேறொரு ஆணைக் காதலி திருமணம் செய்து நிகழ்வு ஒன்று மெக்சிகோவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஹுசைன் மார்ட்டின், இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில் அவரது தாயாருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரிய வந்துள்ளது.

அதன்பின்னர் காதலி மீது கொண்ட அன்பால் அவரது தாயாருக்கு உதவ எண்ணி சிறுநீரகத்தைத் தானமாக வழங்கி உள்ளார்.

காதலியின் தாயார் குணமான நிலையில் காதலி ஒரே மாதத்தில் அந்த ஆணின் தொடர்பினைத் துண்டித்துள்ளார்.

மேலும் வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஹூசைன் மார்ட்டின் மிகவும் வேதனைக்கு ஆளாகி டிக் டாக்கில் இதுகுறித்து சோகமாகப் பதிவிட்டு உள்ளார்.

மேலும் தன்னைப் போல் யாரும் செய்து ஏமாந்துவிட வேண்டாம் என்று சோகமாகக் கூற மக்கள் அனைவரும் உங்களைப் போன்ற ஒரு மனிதரை இழந்த அவர்தான் வருத்தப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top