Connect with us

காதலிக்கு டிமிக்கி கொடுத்து கம்பி எண்ணிய காதலன்!! பின்னணி என்ன?

wedding poruttham

தமிழகம்

காதலிக்கு டிமிக்கி கொடுத்து கம்பி எண்ணிய காதலன்!! பின்னணி என்ன?

மதுரை மேலூரில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற இளைஞர், பிணையிலிருந்து வந்தவுடன் சிறை வளாகத்திலே அப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

மதுரை மாவட்டம் மணப்பட்டியை சேர்ந்தவர் ரம்யா. இவர் கோட்டப்பட்டியை சேர்ந்த அழகுராஜா என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு கேட்டதாக தெரிகிறது.

இந்த சூழலில் திருமணத்திற்கு மறுத்த அழகுராஜா, ரம்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதன் பேரில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்த போலீசார் மேலூர் சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் பிணையில் வெளிவந்த அழகுராஜா, தான் ஏமாற்றிய ரம்யாவை, சிறை வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும்  திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top