Connect with us

கோரிக்கை அக்சப்ட்; மார்ச் 6ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்தலாம்!

book fair

Tamil Nadu

கோரிக்கை அக்சப்ட்; மார்ச் 6ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்தலாம்!

கோரிக்கை அக்சப்ட்; மார்ச் 6ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்தலாம்!

தமிழகத்தில் கடந்த மாதம் அமலில் இருந்த அனைத்து நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து விட்டது. இதன் விளைவாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மீண்டும் வாபஸ் பெறப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொருட்காட்சி, புத்தக கண்காட்சிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு கூறியிருந்தது.

இதனால் புத்தக கண்காட்சி நடத்தப்படாததால் சென்னையில் உள்ள புத்தகங்கள் தேக்கம் அடைந்துள்ளதாக சங்கத்தினர் கூறியுள்ளனர். அதோடு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தலைநகர் சென்னையில் பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 6ஆம் தேதி நடக்க இருந்த புத்தக கண்காட்சி நிறுத்தப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top