பிலிப்பைன்ஸில் உயிரிழந்த தமிழ் மாணவரின் உடல் தமிழகம் கொண்டு வரப்பட்டது!
தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ் மாணவர்கள் வெளிநாடுகளிலும் படிக்கின்றார்கள். ஒரு சில நேரங்களில் அந்த மாணவர்கள் விபத்தின் காரணமாக பரிதாபமாக உயிரிழக்கின்றனர். அந்த வரிசையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்புக்காக சென்ற மாணவர் உயிரிழந்துவிட்டார் மாணவர் சஷ்டிகுமார் உடல் தமிழகம் கொண்டு வரப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கையால் மாணவர் சஷ்டிகுமார் உடல் தமிழகம் கொண்டுவரப்பட்டது. போடிநாயக்கனூர் சேர்ந்த சஷ்டிகுமார் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
பிலிப்பைன்ஸில் அருவியில் கடந்த 15ஆம் தேதி குளித்தபோது அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்தார் மாணவர் சஷ்டிகுமார். சஷ்டிகுமார் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று சஷ்டிகுமார் உடலை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழக அரசின் அயலகத் தமிழர் நல ஆணையரகம் மூலம் இந்திய தூதரகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
