கோவை உப்பிலிபாளையம் அருகே தனியார் குடியிருப்பு தண்ணீர் தோட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு – சிங்காநல்லூர் போலீசார் விசாரணை.
கோவை ரத்தினபுரியை சேர்நதவர் மூர்த்தி (late) இவரது மனைவி தேவி (27). கூலி வேலை செய்து வந்தார். இவரது சகோதரி சத்யா (33). இவர்கள் இருவரும் நேற்று கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.
அப்போது மாலை 5.30 மணியளவில் பணியில் இருந்த தேவி மாயமானார் இதையடுத்து சத்யா அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், 7.30 மணியளவில் அங்கிருந்த தண்ணீர் தோட்டியில் பார்த்த போது தேவி உள்ளே சடலமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறை மற்றும் போலீசுக்கு தகவல் அளித்தனர். அங்கு தீணைப்பு வீரர்கள் தேவியின் உடலை மீட்டனர். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.