நாகை இராணுவவீரர் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!!!
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு எல்லைகளில் ராணுவ வீரர்கள் பாதுகாத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து நாட்டிலேயே பாதுகாப்பதில் முதன்மையாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றனர்.
நம் இந்தியாவிலும் இத்தகைய உயர்திரு ராணுவ வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்தப்படி அவர்கள் அவ்வப்போது அண்டை நாடுகள் மற்றும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் உயிரிழப்பதும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது.
மேற்கு வங்கத்தில் உயிரிழந்த நாகை ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. நாகை மாவட்டம் கீழையூரை சேர்ந்த ராணுவ வீரர் ஞானசேகரன் 45 வயதும், அவர் கடந்த 7ஆம் தேதி உயிரிழந்தார்.
அதன்படி தமிழக வீரர் மேற்குவங்கத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு மோதலில் உயிரிழந்துள்ளார். ராணுவ வீரர் ஞானசேகரன் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப் பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
ஞானசேகரன் உடல் அவரது சொந்த ஊரான கீழையூர் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க ஞானசேகர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
