நீட் தேர்வை பாஜக ஆதரிப்பது மக்களுக்கு செய்யும் விரோதம்: கனிமொழி;

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கியம் நீட் தேர்வு விலக்கு மசோதா ஆகும். இதற்கு திமுக அரசுக்கு 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

அதே சமயத்தில் மத்தியில் ஆளும் பாஜக கட்சி நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக சார்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். அதோடு மட்டுமில்லாமல் அவர் நீட் எதிர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்று கூறினார்.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கருத்து கூறியுள்ளார். அதன்படி நீட்தேர்வு ஆதரிப்பது மக்கள் விரோதம் என்று கூறியுள்ளார். மக்கள் தொடர்ந்து எதிர்ப்பும் நீட் தேர்வை பாஜக ஆதரிப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமான செயல் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

பாஜக  நீட் தேர்வுக்கு ஆதரவு தருவது சமூக நீதிக்கு எதிரானது என்று கனிமொழி கூறினார். நீட் தேர்வுக்கு ஆதரவான பாஜகவின் நிலைப்பாட்டை விமர்சித்து சாத்தான்குளத்தில் திமுக எம்பி கனிமொழி பேட்டி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment