2017 ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த முறை அதிக வாக்குகளை பெற்ற பிஜேபி!

நேற்றைய தினம் 2022ஆம் ஆண்டு 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் பாஜகவிற்கு இந்த தேர்தல் கடந்த முறையை விட சற்றே வாக்குகள் உயர்ந்துள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு பாஜக 39.67 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் தற்போதோ 41.3 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் 2017 ஆம் ஆண்டு 312 தொகுதிகளில் பாஜக வென்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று 255 தொகுதிகளில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவா மாநிலத்தில் பாஜக இருக்கும் ஓரளவிற்கு வாக்குகள் உயர்ந்து கிடைத்ததாக காணப்படுகிறது. அதன்படி 2017ம் ஆண்டு வெறும் 32.5 சதவீதம் வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டு தேர்தலில் 33.3 சதவீதம் வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை சற்று அதிகமாக கிடைத்துள்ளது. அதன்படி 2017ம் ஆண்டு பாஜகவிற்கு 5.4 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. 2022ஆம் ஆண்டு தேர்தலில் 6.6 சதவீதம் வாக்குகள் பாஜகவிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் மாநிலத்தில் ஓரளவிற்கு பாஜகவுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்துள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டில் 36.3 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக 2022ஆம் தேர்தலில் 37.8 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உத்தரகாண்ட் மாநிலத்தில் தவிர மீதமுள்ள நான்கு மாநிலங்களிலும் பாஜக விற்கு வாக்குகள் உயர்ந்து கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment