நாளை நடக்க இருக்கின்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது!: அண்ணாமலை

நேற்றைய தினம் மாலை ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு நேற்று திமுக எம்பிக்கள் நீட் விலக்கு மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா குறித்து ஆலோசனை மேற்கொள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

neet cancle

இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார். நீட் தேர்வு முறை மூலம் தமிழக மாணவர்கள் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர் என்று கூறினார்.

நீட் தேர்வு என்பது தனியார் மருத்துவ கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பதற்கு எதிராக உள்ளது என்று அண்ணாமலை கூறினார். நீட் தேர்வு என்பது மருத்துவ கல்லூரிகளின் கட்டண கொள்கை கடிவாளமாக அமைகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

நீட் தேர்வு முறை மூலம், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர் என்று கூறினார். நீட் தேர்வு முறை மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் மாநில வழி கல்வி முறை மூலம் பயின்றவர்கள் பயன் பெற்று வருகின்றனர் என்றும் கூறினார்.

நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைந்துள்ளது என்றும் அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறினார். இதனால் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு பங்கேற்காது என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

ஆளுநர் அனுப்பிய கடிதம் குறித்து அறியாமல் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதாகவும் அண்ணாமலை கூறினார். தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறை 40 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment