News
34 தொகுதியை தேர்வு செய்து அதில் 20 தருமாறு வலியுறுத்தும் பாரதிய ஜனதா கட்சி!
சில நாட்களில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக களமிறங்க உள்ளது.20 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்தன எனினும் பாஜகவினர் எந்த ஒரு குறையுமின்றி 20 தொகுதிகளை ஏற்றுக்கொண்டு அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

20 தொகுதிகள் தெரியாத நிலையில் பாஜக தரப்பினர் 34 தொகுதிகளை தேர்வு செய்து அதில் 20 தொகுதிகளில் தருமாறு வலியுறுத்தி உள்ளனர். மேலும் அதில் அதிமுகவின் பலம் வாய்ந்த கொங்கு மண்டல பகுதியான சூலூர், திருப்பூர், கோவை தெற்கு போன்ற பகுதிகளும் உள்ளது.
மேலும் துறைமுகம், சேப்பாக்கம் போன்ற பகுதிகளிலும் தருமாறு வலியுறுத்தி உள்ளனர். இதனால் இவ்விரு அணிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
