Connect with us

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினையை அரசியலாக்கி பஞ்சாப்பை அவமானப்படுத்தும் பாஜக!: முன்னாள் பிரதமர்

punjab modi supreme court

செய்திகள்

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினையை அரசியலாக்கி பஞ்சாப்பை அவமானப்படுத்தும் பாஜக!: முன்னாள் பிரதமர்

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினையை அரசியலாக்கி பஞ்சாப்பை அவமானப்படுத்தும் பாஜக!: முன்னாள் பிரதமர்

இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடக்க இருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய கட்சிகள் வரிசையாக பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் அதிதீவிரமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது.

manmohan singh

இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் காங்கிரஸ் சாதனையை மக்கள் நினைவு கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார். பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினையை அரசியலாக்கி பஞ்சாப் முதல்வரை, மக்களை பாஜக அவமானப்படுத்துகிறது என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆகிறார்கள் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார். பொருளாதார கொள்கைகள் குறித்து பாஜகவுக்கு புரிதலே கிடையாது என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top